#BREAKING: சட்டப்பேரவையில் முதல் சம்பவம்..!!
Updated: Oct 14, 2025, 10:42 IST1760418742349
தமிழ்நாடு சட்டமன்றம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் கூடி இருக்கிறது. இன்று தொடங்கி வரும் 17ம் தேதி வரை 4 நாட்கள் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. பேரவை கூடியதும் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 8 பேருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.
தொடர்ந்து, கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள், மறைந்த முன்னாள் ஜார்கண்ட் முதல்வர் சிபு சோரன், மறைந்த கேரளாக முதல்வர் அச்சுதானந்தன், மறைந்த சிபிஐ மூத்த தலைவர் சுதாகர் ரெட்டி. மறைந்த நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன், மறைந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரி பீலா வெங்கடேசன், மறைந்த வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
பின்னர் கரூரில் உயிரிழந்த 41 பேருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. இறந்தவர்களின் புகைப்படங்கள் பேரவையில் முதல் முறையாக எல்இடி திரையில் டிஜிட்டல் மூலம் ஒளிபரப்பப்பட்டது. முன்னதாக உறுப்பினர்கள், கரூர் துயரத்திற்கு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.
பாமக சட்டமன்ற குழு தலைவர் பதவியில் இருந்து ஜி.கே.மணியை நீக்க வலியுறுத்தி கடந்த 25-ம் தேதி சபாநாயகரிடம் கடிதம் கொடுக்கப்பட்டதாகவும், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறி, அக்கட்சி எம்எல்ஏக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

