#BREAKING : லாரி உள்ளிட்ட வாகங்களுக்கான (FC) கட்டண உயர்வு 3 மாதங்களுக்கு ஒத்திவைப்பு..!

 
1


கனரக வாகனங்களுக்கான தகுதிச் சான்றிதழ் புதுப்பிப்பதற்கான கட்டணத்தை மத்திய அரசு 10 மடங்கு உயர்த்தி உள்ளது. 10 முதல் 15 ஆண்டுகள் வாகனங்களுக்கு ஆயிரம் ரூபாய் மற்றும் கூடுதல் வரி எனவும்,15 முதல் 20 ஆண்டுகள் வாகனங்களுக்கு 2,500 ரூபாயில் இருந்து 12,500 ரூபாய் ஆகவும், 20 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களுக்கு 3,500 ரூபாயில் இருந்து 25 ஆயிரம் ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

இதற்கு லாரி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தங்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்றனர்.  இதற்கு எதிராக போராடுவது குறித்து ஆலோசித்து வந்தனர்.இந்நிலையில்,  கனரக வாகனங்களுக்கான தகுதி சான்றிதழ் புதுப்பிக்கும் கட்டணத்தை ரத்து செய்யும் வரை  பிப்.,25 நள்ளிரவு முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற  வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தினர் அறிவித்தனர்.

Advertisement


இந்த நிலையில் லாரி உள்ளிட்ட வாகங்களுக்கான தகுதிச் சான்றிதழ்(FC) கட்டண உயர்வு 3 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது .லாரி உரிமையாளர் சங்கங்களின் கோரிக்கைகளை ஏற்று தமிழ்நாடு அரசு உத்தரவு. தகுதிச் சான்றிதழ்(FC) பெறுவதற்கு பழைய கட்டணமே வசூலிக்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.