#BREAKING : மேற்கு வங்கத்தில் 58 லட்சம் வாக்காளர்களை நீக்கியது இந்திய தேர்தல் ஆணையம்..!!

 
Q Q
2026ல் தேர்தல் நடைபெறும் மேற்கு வங்கத்தில் 58 லட்சம் வாக்காளர்களை நீக்கியது இந்திய தேர்தல் ஆணையம்.
இடம் பெயர்ந்தவர்கள் என கூறி 19.92 லட்சம் பேர், கண்டுபிடிக்க முடியவில்லை என கூறி 1.21 லட்சம் பேர் என பல்வேறு காரணங்களால் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. அந்த கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி முதல்வராக உள்ளார். தமிழகத்தை போல் அடுத்த ஆண்டு மேற்கு வங்க மாநிலத்திலும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் தான் 'சார்' எனும் வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கை மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்தது. இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் மொத்தம் 58 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில
இறந்த வாக்காளர்கள் என்று 24 லட்சம் பேரின் பெயர்களும், போலி வாக்காளர்கள் என்று 1.38 லட்சம் பேரின் பெயர்களும் நீக்கப்பட்டுள்ளது.