#Breaking: நடிகர் விஜய்யின் தவெக கொடி விவகாரத்தில் தலையிட முடியாது - தேர்தல் ஆணையம்

 
vijay

நடிகர் விஜய்யின் தவெக கொடி விவகாரத்தில் தலையிட முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்  விஜய்,  கட்சியின் அதிகாரப்பூர்வ கட்சிக் கொடியினையும், கட்சியின் பாடலையும்  கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி   அறிமுகம் செய்து வைத்தார். பனையூரில் உள்ள  தலைமை அலுவலகத்தில், நிர்வாகிகள் முன்னிலையில் உறுதிமொழியேற்று கொடியை அறிமுகம் செய்திருந்தார். அந்தக் கட்சிக்கொடியானது  இருபுறமும் யானை, வாகை மலருடன், சிவப்பு, மஞ்சள் நிறத்தில் அமைந்திருந்து. இந்நிலையில்  நடிகர் விஜய் அறிமுகப்படுத்திய தவெக கொடியில் பகுஜன் சமாஜ் கட்சியின் தேர்தல் சின்னமான யானை இடம்பெற்றிருந்தது சர்ச்சை ஏற்படுத்தியது.  யானைச் சின்னத்தை கொடியில் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி பகுஜன் சமாஜ் கட்சி தேர்தல் ஆணையத்தின் புகார் அளித்தது. 
 #Breaking: நடிகர் விஜய்யின் தவெக கொடி விவகாரத்தில் தலையிட முடியாது - தேர்தல் ஆணையம்
இந்நிலையில் நடிகர் விஜய்யின் தவெக கோடி விவகாரத்தில் தலையிட முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் பகுஜன் சமாஜ் கட்சியின் கோரிக்கையையும் நிராகரித்துள்ளது. கட்சி கொடிகள் மற்றும் அதில் இடம்பெறும் சின்னங்களுக்கு எப்போதும் தேர்தல் ஆணையம் ஒப்புதல் கொடுப்பதில்லை என்றும்,  பிற கட்சிகளின் சின்னங்கள் பெயர்களை பிரதிபலிக்காமல் கொடி இருப்பதை உறுதி செய்ய வேண்டியது அந்தந்த கட்சிகளின் பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளது. யானை சின்னத்தை பயன்படுத்துவதற்கு தடை விதிக்குமாறு பகுஜன் சமாஜ் கட்சி விடுத்திருந்த கோரிக்கையும் நிராகரித்துள்ளது.