#BREAKING : எடப்பாடி பழனிசாமி 6000 வாக்குகள் பெற்று முன்னிலை..!
May 4, 2026, 09:02 IST1777865538843
எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து முன்னிலை.
எடப்பாடி தொகுதியில் 5 முறை வென்று, இரு முறை தோல்வி அடைந்துள்ள எடப்பாடி பழனிசாமி, தற்போது எட்டாவது முறையாக போட்டியிடுகிறார். இந்தத் தொகுதியில் தவெக வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் அதிமுக இருப்பதாக தவெகவின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் எடப்பாடி தொகுதியில் சுயேச்சை வேட்பாளரான பிரேம்குமாருக்கு தவெக ஆதரவு தெரிவித்துள்ளது. அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொலைக்காட்சி சின்னத்தில் வாக்களிக்குமாறு அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சற்றுமுன் வந்த தகவலின் படி எடப்பாடி பழனிசாமி 6000 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.

