#BREAKING ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டாம் - அன்பில் மகேஸ் உத்தரவு..

 
anbil-mahesh-3

கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் மாணவர்களுக்கு இணையவழி வகுப்புகள் (Online Classes) நடத்த வேண்டாம் என அனைத்து பள்ளி நிர்வாகங்களுக்கும் அமைச்சர் அன்பில் மகேஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில்,  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.  இதனால் பாதுகாப்புக் கருதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் , செங்கல்பட்டு , கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.  இதேபோல் கோவை மாவட்டத்தில் பள்ளிகலுக்கு அரைநாள் விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது மதியம் வரை மட்டுமே பள்ளிகள் இயங்கும் என கூறப்பட்டுள்ளது.  

online

மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டாலும், ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படலாம் என்பதால் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அதில், கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் மாணவர்களுக்கு இணையவழி வகுப்புகள் (Online Classes) நடத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.  

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் மாணவர்களுக்கான இணையவழி வகுப்புகளையும் (Online Classes) ஒத்தி வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். கனமழை மற்றும் தீவிரக் காற்று வீசும் சூழ்நிலையில் மாணவர்கள் தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம். ஆகையால் கனமழை முடியும் வரை ஆன்லைன் வகுப்புகளைத் தவிர்க்க வேண்டும் என அனைத்துப் பள்ளி நிர்வாகங்களையும் கேட்டுக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.