#BREAKING : இறுதியானது திமுக - தேமுதிக தொகுதி உடன்பாடு : 10 தொகுதிகள் ஒதுக்கீடு..!
திமுக கூட்டணியில் யாருக்கு எந்த தொகுதிகள் ஒதுக்குவது தொடர்பான இறுதி கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. விசிக மற்றும் மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் முடிவாகி ஒப்பந்தமாகி உள்ளது. காங்கிரஸ், தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய 3 கட்சிகள் இடையே பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
முதன் முறையாக திமுக கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிகவுக்கு காங்கிரசுக்கு அடுத்தபடியாக அதிக தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது. திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஏற்கனவே ஒரு ராஜ்யசபா சீட் வங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சற்று முன் பேசிய தேமுதிக பொருளாளர் சுதீஷ்,
திமுக கூட்டணியில் தேமுதிக போட்டியிடும் 10 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன என்றும் தொகுதி விவரங்களை இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்றும் அறிவித்துள்ளார்.
Election Breaking News | "தேமுதிகளின் 10 தொகுதிகள் இறுதியானது"#ElectionsWithNews18 #Election2026 #News18TamilNadu #TamilNews
— News18 Tamil Nadu (@News18TamilNadu) March 28, 2026
For More Details WATCH LIVE : https://t.co/wei01m6qgT pic.twitter.com/zFn5JBvZe3

