#BREAKING : திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி... முதலமைச்சரை சந்திக்கும் ப.சிதம்பரம்..!!
Updated: Mar 3, 2026, 12:55 IST1772522708604
திமுக - காங்கிரஸ் கூட்டணி இடையே தொடர் இழுபறி நிலவி வருகிறது. பிப்ரவரி 28 ஆம் தேதி இருதரப்பும் முதற்கட்ட பேச்சுவார்த்தையை முடித்திருந்தனர். அதிக சீட்டுகள் வேண்டும் என்பதில் காங்கிரஸ் விடாப்பிடியாக இருப்பதால் இருதரப்புக்கும் இடையே சுமுகமான தீர்வு எட்டப்படவில்லை.
திமுக கொடுக்கும் 25 இடங்களையெல்லாம் வாங்கிக் கொள்ள முடியாது என கிரிஷ் சோடங்கர் டெல்லியில் வெளிப்படையாக பேட்டி கொடுத்திருந்தார். இந்நிலையில், மார்ச் 3 ஆம் தேதி மாலைக்குள் கூட்டணி குறித்து ஒரு முடிவை தெரிவிக்குமாறு திமுக தரப்பு காங்கிரஸிடம் கறாராக கூறியிருந்தது.
கூட்டணிக்குள் புகைச்சல் நிலவி வரும் நிலையில் காங்கிரஸின் மூத்த தலைவரான ப.சிதம்பரம் முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் இன்று மதியம் 12:30 மணியளவில் சந்தித்து பேசவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
சிக்கலில் உள்ள தி.மு.க -காங்கிரஸ் கூட்டணியை காப்பாற்ற ப.சிதம்பரம் இறுதி முயற்சியில் ஈடுபட வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது.

