#BREAKING : ராஜபாளையத்தில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் தமமுக..!

 
1

அதிமுக கூட்டணியில் ஏற்கெனவே பாஜகவுக்கு 27 தொகுதிகள், பாமகவுக்கு 18 தொகுதிகள், அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்த 5 தொகுதிகளிலும் தமாகா தாமரை சின்னத்தில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், அதிமுக கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சிக்கு ராஜபாளையம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக பாஜக பொறுப்பாளர் பியூஷ் கோயல் தலைமையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

அதன் பின் பேசிய அக்கட்சி தலைவர் ஜான் பாண்டியன், "தமமுகவுக்கு ராஜபாளையம் பொதுத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுத் தொகுதியை தந்ததே பட்டியல் வெளியேற்ற கோரிக்கை வென்றதற்கு அறிகுறி.
பட்டியல் வெளியேற்றத்தின் அறிகுறியாக, முதல் வெற்றியாக பொதுச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. விருப்பத் தொகுதி பட்டியலில் பல தொகுதிகளை கேட்டோம். இப்போது மன நிறைவோடு செல்கிறோம். எந்த சின்னம் என்பது பின்னர் அறிவிக்கப்படும்," என்று தெரிவித்தார்.


இந்நிலையில் ராஜபாளையம் தொகுதியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் தாமரை சின்னத்தில் போட்டியிடுவார் என ஜான் பாண்டியன் அறிவித்துள்ளார். இந்த தொகுதியும் சேர்த்து தமிழ்நாட்டில் 33 இடங்களில் களம் காண்கிறது தாமரை சின்னம்