#BREAKING: இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிப்பு...!

 
1

 

தமிழகத்தில் அக்டோபர் 6ம் தேதி நடக்கும் மதுராந்தகம் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. இந்நிலையில் இடைத்தேர்தலை அணுகுவது குறித்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டை இல்லத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன், எ.வ.வேலு மற்றும் கனிமொழி ஆகியோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். மேலும் இரண்டு மாவட்ட இரண்டு தொகுதிகளின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பு நிர்வாகிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

வேட்பாளர் தேர்வு மற்றும் தேர்தல் பணி குறித்து தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.இந்தக் கூட்டத்தில் திமுக இடைத்தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன.  

இந்நிலையில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை திமுக அறிவித்து உள்ளது. 

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு; "வருகிற 06-10-2026 அன்று நடைபெற உள்ள மதுராந்தகம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் வழக்கறிஞர் திரு. ஐ.பரந்தாமன், பி.ஏ., பி.எல்., (தி.மு.க.சட்டத்துறை இணைச் செயலாளர்) அவர்களும்; 

தாராபுரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் வழக்கறிஞர் திருமதி. எஸ். சுகன்யா, எம்.ஏ., பி.எல்., அவர்களும் கழக வேட்பாளர்களாக போட்டியிடுவார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.