#BREAKING : கரூர் விஜய் பிரச்சாரத்தில் நெரிசல் - பலி எண்ணிக்கை 38 ஆக உயர்வு..!
Sep 27, 2025, 23:06 IST1758994585395
விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் 16 பெண்கள் உட்பட 36 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது பலி உயர்வு 38 ஆக உயர்ந்துள்ளது. 58 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 12 பேர் கவலைக்கிடமாக சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ்கள் அணி வகுத்தபடி செல்லும் காட்சிகள் காண்போரை கலங்க வைப்பதாக உள்ளது.
கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 8 குழந்தைகள் 16 பெண்கள் உட்பட 38 பேர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

