#BREAKING : அனைத்து விவசாயிகளுக்கும் பாகுபாடின்றி ரூ. 75,000/- வரை பயிர்க்கடன் தள்ளுபடி...!
தமிழகத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.75,000 கடன் தள்ளுபடி செய்வதாக முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற ரூ.75,000 வரை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அனைத்து விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி செய்ய ரூ.9,062 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.75,000 வரை கடன் பெற்றவர்களுக்கு முழுமையாக தள்ளுபடி செய்யப்படுகிறது. இதற்கான கால அவகாசம் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு நிறுவனங்களின் மூலம் பயிர்க்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் பாகுபாடின்றி ரூ. 75,000/- வரை பயிர்க்கடன் தள்ளுபடி. தள்ளுபடிக்குத் தகுதியான பயிர்க் கடன்களுக்கான காலவரையறை 01.05.2025 முதல் 31.03.2026 வரை நீட்டிப்பு. விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடிக்காக அரசு ஒட்டுமொத்தமாக ரூ. 9,062.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

