#BREAKING சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கவலைக்கிடம்!
சிபிஎம் பொதுச்செயலாளார் சீதாராம் யெச்சூரி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மூச்சு குழாய் அழர்ச்சிக்காக யெச்சூரி சிகிச்சை பெற்று வருவதாகவும், செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டுள்ள நிலையில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அவரது உடல்நிலை குறித்து கட்சித் தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 19ம் தேதி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் நுரையீரல் தொற்று காரணமாக சீதாராம் யெச்சூரி அனுமதிக்கப்பட்டதாகவும், அவருக்கு எய்ம்ஸ் மருத்துவமனையின் மூத்த மருத்துவர்கள் அடங்கிய குழு தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது. அவரது உடலில் ஏற்பட்டுள்ள நோயின் தீவிரத்தன்மை குறித்து மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்படாமல் உள்ளதாகவும், தற்போது சீதாராம் யெச்சூரிக்கு தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த இக்கட்டான சூழலில் மருத்துவமனையின் அனைத்து துறை சிறப்பு மருத்துவர்கள் குழு, அவரது உடல்நிலையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Comrade Sitaram Yechury’s health condition pic.twitter.com/NDPl8HE8K0
— CPI (M) (@cpimspeak) September 10, 2024
Comrade Sitaram Yechury’s health condition pic.twitter.com/NDPl8HE8K0
— CPI (M) (@cpimspeak) September 10, 2024