#BREAKING : திருப்பரங்குன்றத்தில் தபால் வாக்கு எண்ணிக்கை தற்காலிகளாக நிறுத்தம்..!
May 4, 2026, 08:50 IST1777864858310
மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் திருப்பரங்குன்றம் முக்கிய தொகுதிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. திருப்பரங்குன்றம் தொகுதி மக்களிடையே வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் தபால் வாக்கு எண்ணும் பணி தற்காலிகளாக நிறுத்தப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணிக்கையில் குளறுபடி நடைபெற்றதாக முகவர்கள் குற்றம்சாட்டியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஓட்டு எண்ணும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக இருக்கும் முகவர்களை வெளியேற்றும் படி மதுரை மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

