#BREAKING : நாட்டையே உலுக்கிய சிறுமி பாலியல் வழக்கு - குற்றவாளிக்கு தூக்கு தண்டனை..!

 
1

புதுச்சேரி, முத்தியால்பேட்டையை சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த 2024 ஆண்டு மார்ச் 2ம் தேதி, விளையாடும்போது மாயமானார். இதனிடையே, சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, அதே பகுதி கழிவுநீர் வாய்க்காலில் கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் சாக்கு பையில் கட்டி, வீசப்பட்டு கிடந்தார். 


முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்ததில், இந்த கொடூர செயலில் ஈடுபட்டது சோலை நகர், அம்பேத்கர் நகர், 2வது குறுக்கு தெரு முனுசாமி மகன் கருணா (எ) கருணாஸ், 18; முத்தியால்பேட்டை விவேகானந்தன், 56; என, தெரியவந்து, இருவரையும் கைது செய்தனர். 


கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் 2-ம் தேதி, புதுச்சேரியைச் சேர்ந்த 9 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக முத்தியால்பேட்டையைச் சேர்ந்த கருணாஸ் (18) மற்றும் விவேகானந்தன் (56) ஆகிய இருவரைப் போலீசார் கைது செய்தனர். இதில் விவேகானந்தன் கடந்த 2024 செப்டம்பர் மாதம் சிறையில் தற்கொலை செய்துகொண்டார்.


கருணா மீது போக்சோ விரைவு நீதிமன்றத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விசாரணை நடத்த நிலையில், நீதிபதி சுமதி, கடந்த 30ம் தேதி, கருணாவை குற்றவாளி என அறிவித்து, தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கில் இன்று (மே 08) நீதிபதி சுமதி தண்டனை அறிவித்தார். இந்த சம்பவத்தில் குற்றவாளி கருணாஸ்க்கு துாக்கு தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டது.