#BREAKING : காங்கிரஸ் மாநில பொதுச்செயலர் டி.செல்வம் சஸ்பெண்ட்..!

 
1

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் டி.செல்வம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 

மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று வெளியிட்ட அறிக்கையில் "காங்கிரஸ் பொதுச்செயலாளர் டி. செல்வம் கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டுள்ளார். எனவே, அவர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுகிறார்" என கூறியுள்ளார். காங்., பொதுச்செயலாளர் உள்ளிட்டோர் கூட்டணிக்காக தன்னை சந்தித்ததாக தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா கூறியிருந்த நிலையில், இந்த நடவடிக்கை பேசு பொருளாகி உள்ளது.

1