#BREAKING : முதல்வர் விஜய் கொடுத்த வார்னிங்..! இனி ஊழல் புகாரில் சிக்கினால் அமைச்சர் பதவி பறிக்கப்படும்..!

 
vijay

முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது..

அந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது, 

ஊழல் புகாரில் சிக்கும் அமைச்சர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். தவறு செய்தால் அமைச்சர் பதவி பறிக்கப்படும். தவறு செய்பவர்களில் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்றெல்லாம் பார்க்கமாட்டேன். தவறு நடந்தது தெரிந்தால் பதவி உடனே பறிக்கப்படும். தனது தலைமையிலான தவெக அரசு வெளிப்படைத் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். தவெக அரசு லஞ்சமற்ற அரசாக இருக்க வேண்டும் என்பதில் அமைச்சர்கள் உறுதியாக இருக்க வேண்டும்.

பள்ளிகளுக்கு சென்று அமைச்சர்கள் ரீல்ஸ் போடுதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடக்கூடாது. அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு ஆய்வு என்ற பெயரில் செல்வதை அமைச்சர்கள் தவிர்க்க வேண்டும். ஆய்வு என்ற பெயரில் பள்ளிகளுக்கு சென்று செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது. அமைச்சர்கள் ரீல்ஸ் போடுதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடக்கூடாது.

இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.