#BREAKING : முதல்வர் விஜய்யின் கேரள பயணம் ரத்து..!!
கோவையில் அரசு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு தமிழக முதலமைச்சர் விஜய் கேரளா மாநிலம் திருச்சூர் செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், கோவையின் பல்வேறு இடங்களிலும் திருச்சூரிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
திருச்சூரில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிகக் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆர்வலர்கள் கணித்துள்ளனர்.
வானிலை மேலும் மோசமடைந்தால், பாதுகாப்பு காரணங்களுக்காக முதல்வர் விஜய்யின் கேரளா பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்தார் முதலமைச்சர் விஜய்.இந்நிலையில் கல்யாண் ஜூவல்லர்ஸ் சார்பில் ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் கோவையில் மழை பெய்து வருவதால் முதலமைச்சர் விஜய் ஹெலிகாப்டர் பயணம் பாதுகாப்பானதாக இருக்காது எனக் கூறி அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதனால் முதலமைச்சர் விஜயின் திருச்சூர் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது

