#BREAKING : சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் பதிலுரை - எதிர்க்கட்சிகள் அமளி..!
சட்டம் ஒழுங்கு சரியாக இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. பெண் பாதிக்கப்படுவதையும் யாராலும் சகித்துக் கொள்ள முடியாது. அதற்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை அரசு எடுத்துக் கொண்டிருக்கிறது. சிங்கப்பெண் அதிரடிப் படை அதற்கான முதல் படி, போதைப்பொருளையும் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறோம். நான் சொன்ன பிரச்சனைகள் பல வருடம் கண்டுக் கொள்ளாமல் விட்ட பிரச்சனை. இன்று எதிர்க்கட்சிகள் அதை கேட்கும் பொழுது ப்ழிப்போடும் அரசியலாக தான் தெரிகிறது. போன ஆட்சியில் நடந்தவற்றுக்கு இப்போது தான் விடை கண்டுக் கொண்டிருக்கிறோம். சட்டம் ஒழுங்கை பற்றி தாராலமாக கேள்வி கேட்கலாம். இது ஜனநாயக அரசு, மன்னர் ஆட்சி இல்லை. மனசாட்சி உள்ள மக்கள் ஆட்சி என்றார்.
சட்டசபையில் பேசிய விஜய், நம் அரசின் நிர்வாக திறன் பற்றி பேசுபவர்களுக்கு ‘ஊரை அடித்து உலையில் போட்டு’ ஊழல் மேல் ஊழலாக செய்து கொண்டிருந்தவர்களுக்கு அதில் இருந்து தப்பிப்பது பெயர் தான் நிர்வாக திறன் என்று சொன்னால் அப்படிப்பட்ட ஊழல் செய்யும் நிர்வாக திறனை நம் அரசு ஒரு நாளும் செய்யாது. டாஸ்மாக்கில் கட்சி நிதி (PARTY FUND) என்று அடித்த கொள்ளை ஒவ்வொன்றாக கஜானாவிற்குள் சேர்த்துக் கொண்டிருக்கிறோம் என்றார்.
சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் உரையில் திமுக ஆட்சியில் நடைபெற்ற party fund என குறிப்பிட்டதற்கு திமுகவினர் கடும் அமளி
சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் உரையில் திமுக ஆட்சியில் நடைபெற்ற party fund என குறிப்பிட்டதற்கு திமுகவினர் கடும் அமளி #dmk #TVKVijay #TVKGovt #TNAssemblySession #cmspeech pic.twitter.com/OtDXMMnakl
— Mageshkumar Ramalingam (@mageshkumar27) June 23, 2026
சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் உரையில் திமுக ஆட்சியில் நடைபெற்ற party fund என குறிப்பிட்டதற்கு திமுகவினர் கடும் அமளி #dmk #TVKVijay #TVKGovt #TNAssemblySession #cmspeech pic.twitter.com/OtDXMMnakl
— Mageshkumar Ramalingam (@mageshkumar27) June 23, 2026

