#BREAKING : டிரைவிங் லைசென்ஸ் இனி ஆன்லைனில் பதிவிறக்கம் - முதல்வர் விஜய் அதிரடி.!

 
1

தமிழகத்தில் ஓட்டுநர் உரிமம், வாகன சான்றிதழ்களை இனி ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யும் வகையில் மேம்படுத்தப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.இதன்படி விரைவில் டிஜிட்டல் முறையில் ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி வழங்க ஏற்பாடு செய்யப்படும் என முதல்வர் விஜய் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்

சட்டப்பேரவையில் இன்று 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்ட அவர், ஓட்டுநர் உரிமம் பெறுவதில் ஏற்படும் கால தாமதத்தை குறைக்க ஓட்டுநர் உரிமம் டிஜிட்டல் முறையில் ஒரே நாளில் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.வரும் 15ஆம் தேதி முதல் ஆன்லைனில் ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு சான்றுகளை பதிவிறக்கம் செய்து டிஜிட்டல் முறையில் பயன்படுத்தலாம்.

டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் ஒரே நாளில் வழங்கப்படும். சோதனை நடைபெறும் நாளிலேயே உரிமம் பெற முடியும் என்றார்.


முதல்வரின் இந்த அறிவிப்புகள் பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.