#BREAKING : முதலமைச்சராக முதல்முறையாகத் தேசியக் கொடி ஏற்றிய முதலமைச்சர் விஜய்!

 
1

சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியேற்றுவதற்காக முதலமைச்சர் விஜய் காலை 8:35 மணியளவில் வருகை தந்தார். விழா மேடைக்கு வருகை தந்த முதலமைச்சர், திறந்தவெளி வாகனத்தில் சென்று காவல்துறையினரின் கம்பீரமான அணிவகுப்பு மரியாதையினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாட்டின் 80வது சுதந்திர தினத்தையொட்டி, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி, தேசியக் கொடியை ஏற்றியதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் கோட்டை கொத்தளத்திலுள்ள கொடி கம்பத்தில் தேசியக் கொடியை முதலமைச்சர் விஜய் முதன்முறையாக ஏற்றினார்.