#Breaking: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு..

 
annamalai

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  

 தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள்  தாக்கப்படுவதாக வட மாநிலங்களில் சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்கள் பரப்பியதனால், பல்வேறு சர்ச்சைகள் பூதாகரமாக வெடித்துள்ளன.  இந்த விவகாரம் தொடர்பாக பிஹார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் சமூக வலைதள பக்கத்தில்,   தமிழக அரசு சார்பிலும்,  தமிழ்நாடு காவல்துறை சார்பிலும் பல்வேறு பதில்கள் அளிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுபோன்ற தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை என்றும்,  வெவ்வேறு மாநிலங்களில் நடைபெற்ற பழைய, போலியான வீடியோக்களை பயன்படுத்தி தமிழகத்தில் நடந்ததாக தவறான பரப்புரை செய்யப்படுவதாக விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளது.  அத்துடன் தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி வந்த பீகார் மாநிலத்தைச் சேர்த பாஜக நிர்வாகியை கைது செய்ய தூத்துக்குடி தனிப்படை போலீஸார் டெல்லி விரைந்துள்ளனர்.

வடமாநில தொழிலாளர்கள்

தொடர்ந்து இதுபோன்ற வட மாநில தொழிலாளர்கள் குறித்து தவறான தகவல்கள் பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்து இருந்தது. இந்த  நிலையில் நேற்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று  வட மாநில தொழிலாளர்கள் குறித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு - சைபர் கிரைம்  போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.

புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் அவதூறு பரப்பும் வகையில் அறிக்கை வெளியிட்டதாகவும்,   இரு பிரிவினரிடையே மோதலை தூண்டியதாகவும், வன்முறையை தூண்டும் விதமாக கருத்து தெரிவித்ததாகவும்தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது 5 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  தொடர்ந்து தவறான தகவல்களையோ அல்லது வன்முறையை தூண்டும் வகையிலான கருத்துக்களை சமூக ஊடகங்களில் பரப்பும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக காவல்துறையை எச்சரிக்கை விடுத்திருக்கிறது.