#BREAKING : நகை வாங்குவோர் ஷாக்..! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5,200 உயர்ந்த தங்கம் விலை..!!
தங்கம் விலை விண்ணை முட்டும் அளவுக்கு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து பல முறை தங்கம் ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தங்கம் விலை 2 முறை உயர்ந்துள்ளது.
இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,960 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,22,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.370 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.15,330-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை தொடர்ச்சியாக இன்றும் உச்சம் அடைந்துள்ளது. வெள்ளி விலையை பொறுத்தவரையில், கிலோவுக்கு ரூ.13,000 உயர்ந்து, ஒரு கிலோ ரூ.4,00,000-க்கும், கிராமுக்கு ரூ.13 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.400-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சற்றுமுன் தங்கத்தின் விலை சவரனுக்கு மேலும் ரூ.2,240 உயர்ந்துள்ளது. இன்று ஆபரணத் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5,200 உயர்ந்து ரூ.1,24,880க்கும், ஒரு கிராம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.650 உயர்ந்து ரூ.15,610க்கு விற்பனை செய்யப்படுகிறது.


