#BREAKING : புதிய தலைமுறை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!!

 
Q Q

சமீப நாட்களாகவே பிரபலங்கள் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக சொல்லி இமெயில் மூலமாக மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

சென்னை நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

சென்னையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கும் சமீபத்தில் இதுபோன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். முடிவில், அது புரளி என தெரிய வந்தது.

இந்நிலையில்,  புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சி அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் அந்நிறுவனத்திற்கு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், ஊழியர்கள் உடனே வெளியேற்றப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. மிரட்டல் வெறும் புரளி என காவல்துறை தகவல் தெரிவித்தது.