#BREAKING : மநீம தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!!
Oct 9, 2025, 18:03 IST1760013216377
சென்னையில் உள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் கமல் வீட்டில் அமைந்துள்ள மநீம தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மோப்பநாய், வெடிகுண்டு நிபுணர்கள் உடன் போலீஸார் விரைந்துள்ளனர். முன்னதாக, இன்று காலை விஜய்யின் நீலாங்கரை வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. ஆனால், சோதனையின் முடிவில் புரளி என தெரியவந்தது. மேலும் மிரட்டல் விடுத்தவரை போலீஸார் கைது செய்தனர்.


