#BREAKING: ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பா?? இயக்குநர் நெல்சனின் மனைவியிடம் போலீஸ் விசாரணை..

 
 ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக இயக்குனர் நெல்சன் திலீப்குமாரின்  மனைவியிடம் காவல்துறையினர் விசாரணை

ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக இயக்குனர் நெல்சன் திலீப்குமாரின் மனைவியிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 5ம் தேதி பெரம்பூரில் 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய  24 பேர் ஏற்கனவே  கைது செய்யப்பட்டிருக்கிறனர். அத்துடன் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக பல்வேறு நபர்களிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில்,  இயக்குனர் நெல்சன் திலீப்குமாரின் மனைவி மோனிஷாவிடம் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

amstrong

இயக்குனர் நெல்சனின் மனைவி மோனிஷாவுக்கும்,  ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடிகளுக்கும் இடையே தொடர்பிருந்ததாக கூறப்படுகிறது.  குறிப்பாக ரவுடி சம்போ செந்திலின்  கூட்டாளியான மொட்டை கிருஷ்ணனுக்கு அடைக்கலம் கொடுத்தாரா என்கிற சந்தேகத்தில் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. ஏனெனில் மொட்டை கிருஷ்ணன் வெளிநாடு தப்பி சென்று இருக்கக்கூடிய நிலையில், அவருடன்  இயக்குனர் நெல்சன் மனைவி மோனிஷா பலமுறை தொலைபேசியில்  பேசி இருப்பது காவல்துறையின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

மொட்டை கிருஷ்ணனின் தொலைபேசி அழைப்புகளை ஆய்வு செய்ததில் மோனிஷா பேசியது தெரியவந்துள்ளதை அடுத்து, எதற்காக அவர் பேசினார் என்கிற அடிப்படையில் தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  பல நாட்களாக ரவுடி ராதாகிருஷ்ணன் தலைமுறைவாக இருந்து வரும் நிலையில் அவருக்கு மோனிஷா, அடைக்கலம் ஏதும் கொடுத்தாரா?  அவர் தலைமறைவாக  இருப்பதற்கு ஏதேனும் உதவி செய்தாரா? என்கிற அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.  தொடர்ந்து இயக்குனர் நெல்சன் திலீப்குமாரிடம்  விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.