#BREAKING : கோவை பெரியார் அறிவுலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை..!

 
1

கோவை பெரியார் அறிவுலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை.புத்தகம் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடைபெற்றதாக வந்த புகாரை அடுத்து சோதனை.

கோவை பெரியார் அறிவுலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அறிவுலகத்தின் 4வது தளத்தில் உள்ள தமிழ் நூல்கள் பிரிவில் போலியான புத்தகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதோடு, அகல் விளக்கு பதிப்பகம் மூலம் பல கோடிக் கணக்கில் முறைகேடு செய்து ஏஐ மூலம் தயாரிக்கப்ட்ட புத்தகங்களை வாங்கியிருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், போலி புத்தகங்கள் குறித்தும், முறைகேட்டின் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

கடந்த திமுக ஆட்​சியில் கோவை​ காந்திபுரத்தில் ரூ.300 கோடி செலவில் கட்டப்பட்ட பெரியார் அறி​வுல​கம் நூல​க த்தை முதல்வர் விஜய் அக்டோபர் 13-ம் தேதி திறந்துவைத்தார். இந்நூலகத்தை முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடந்த 4-ம் தேதி நேரில் சென்று பார்வையிட்டார்.

இந்​நிலை​யில், கோவை பெரியார் நூல​கத்​துக்​குப் புத்​தகங்​கள் கொள்​முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடந்​திருப்​ப​தாக எழுத்​தாளர் பெரு​மாள் முருகன் சமூக வலை​தளத்​தில் பரபரப்பு குற்​றச்​சாட்டை முன்வைத்தார். இந்த பிரச்சனை தொடர்பாக ஆளுங்கட்சியான தவெகவும் முன்பு ஆட்சியில் இருந்த திமுகவும் மாறி மாறி குற்றஞ்சாட்டி வருகின்றன.

கோவை பெரியார் நூலகத்தை தொடர்ந்து, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம், கன்னிமாரா நூலகம், மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் ஆகியவற்றிலும் நூல்கள் கொள்முதலில் முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

நூலகங்கள் கொள்முதலில் முறைகேடு நடந்த பிரச்னையில் பொது நூலகத்துறை இயக்குநர் பதவியை கூடுதல் பொறுப்பாக வகித்து வந்த ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவரான எஸ்.ஜெயந்தி நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) அந்தப் பொறுப்பிலிருந்து திடீரென விடுவிக்கப்பட்டார்.

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மேலாண் இயக்குநராக பணியாற்றி வரும் ஆர்.வி.ஷஜீவனா, பொது நூலகத்துறை இயக்குநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்றும், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவராக ஜெயந்தி தொடருவார் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.