#BREAKING : மீண்டும் பயங்கரம் : வங்கதேசத்தில் மேலும் ஒரு ஹிந்து நபர் அடித்துக் கொலை

 
Q Q

வங்கதேசத்தில் தற்போது அமைதியற்ற நிலைமை காணப்படும் நிலையில், மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவமாக ஹிந்து நபர் ஒருவர் கொல்லப்பட்டு உள்ளார்.

சுனம்கஞ்ச் மாவட்டம் பங்கடோஹோர் என்ற கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஜாய் மகாபத்ரே தான் அந்த கொல்லப்பட்ட நபர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் கடந்த வியாழன்று நிகழ்ந்ததாகவும், ஜாய் மகாபத்ரே உள்ளூரில் உள்ள கடை ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அவரை அமிருல் இல்லாம் என்ற நபர் விஷம் வைத்து அடித்துக் கொன்றுவிட்டதாகவும் ஜாய் மகாபத்ரே குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர்.

இது திட்டமிட்ட கொலை, எனவே உரிய நடவடிக்கையை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்றும் அவரது குடும்பத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

ஜாய் மகாபாத்ரே மரணத்தை தொடர்ந்து வங்கதேசத்தில் கொல்லப்பட்ட ஹிந்துகள் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது.