#BREAKING: நாளை புது கட்சியை துவங்குகிறார் அண்ணாமலை..!!
Updated: Jun 4, 2026, 09:43 IST1780546431504
கர்நாடகாவில் காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றி தமிழகத்தில் அரசியல் தலைவராக வலம் வரும் அண்ணாமலையின் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன.
அண்ணாமலை புதிய இயக்கம் தொடங்கும் அறிவிப்பை நாளை வெள்ளிக்கிழமை (ஜூன் 5) வெளியிடப் போவதாக அவரே தெரிவித்துள்ளதாக முன்னணி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
சென்னையில் வெள்ளிக்கிழமை ஊடக சந்திப்பை நடத்தி எனது நிலைப்பாடு குறித்து விரிவாக விளக்க உள்ளேன். முதற்கட்டமாக ஓர் இயக்கத்தைத் தொடங்குவது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். ஒன்றரை ஆண்டுகள் அந்த இயக்கத்தை நடத்தி, நிர்வாகிகள், தொண்டர்களுக்கு அரசியல் பயிற்சியை அளித்துவிட்டு, அதன் பின்னர் புதிய அரசியல் கட்சியைத் தொடங்க முடிவு செய்துள்ளேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

