#BREAKING : அண்ணா பல்கலைக்கழக பாலியல் குற்றவாளி ஞானசேகரன் மீதான குண்டாஸ் ரத்து..!

 
Q Q

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பலகலைக்கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி திமுக ஆதரவாளரான ஞானசேகரன் என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஆபாச வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பல பெண்களிடம் தவறாக ஞானசேகரன் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

 

மேலும் ஞானசேகரன் மீது ஏராளமான கட்டப்பஞ்சாயத்து, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட புகார்களும் வெளியானது. இதன் காரணமாக ஞானசேகரனை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

 

இந்த நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்க உத்தரவிட்டது எதிர்த்து அவரது தாயார் கங்கா தேவி சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

 

ஞானசேகரனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக கடந்த 2019 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட பழைய வழக்குகளை காரணம் காட்டி காவல்துறையினர் தற்போது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து சிறையில் அடைத்துள்ளதாக கூறியுள்ளார். எனவே இந்த விவகாரத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்க கூடிய எந்த விதிமுறைகளையும் மாநகர காவல் துறையினர் முறையாக பின்பற்றப்படவில்லை எனவும் மனுவில் கூறியுள்ளார். 

 

போலீசாருக்கு ஏதோ ஒரு அழுத்தத்தின் காரணமாக எனது மகன் மீது வேண்டும் என்றே குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளதாகவும் கூறியுள்ளார். எனவே சட்ட விரோத காவலில் அடைக்கப்பட்டுள்ள எனது மகன் ஞானசேகரனை விடுவிப்பதுடன் எனது மகன் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் வன்கொடுமை குற்றவாளி ஞான சேகரனுக்கு குண்டாஸ் ரத்து செய்துள்ளது சென்னை உயர் நீதி மன்றம்.

ஞானசேகரனின் தாயார் கங்காதேவி தொடர்ந்த வழக்கில், வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் குண்டர் சட்டத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.