#BREAKING : அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு!

 
1

அ.தி.மு.க. தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணியில் அ.ம.மு.க.வுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அக்கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கட்சியில் இணைந்து அமமுக போட்டியிடவுள்ளது. அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
11 தொகுதிகளில், பூவிருந்தமல்லி (தனி) ஏழுமலை, மன்னார்குடி - எஸ் காமராஜ், சைதாப்பேட்டை - செந்தமிழன், மடத்துக்குளம் முன்னாள் அமைச்சர் சண்முகவேலு, காரைக்குடி - தேர்போகி பாண்டி, திருப்பத்தூர் -ஞானசேகரன், திருச்சி மேற்கு-தொட்டியம் ராஜேசேகரன், ஒட்டப்பிடாரம் (தனி)- சுந்தர்ராஜன், பெரியகுளம் (தனி) கதிர்காமு, நான்குநேரி-இசக்கிமுத்து, திருவையாறு - வேலுகார்த்திகேயன் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமமுகவின் வேட்பாளர்கள் அனைவரும் தனிச் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முந்தைய தேர்தல்களில் அமமுக போட்டியிட்ட குக்கர் சின்னம் மீண்டும் கேட்கப்பட்டிருந்தது.