#BREAKING : சட்டப்பேரவையிலிருந்து அ.தி.மு.க வெளிநடப்பு..!
சட்டமன்ற உறுப்பினர்கள் மக்கள் பணியை தொய்வின்றி தொடர்வதற்கும், தொகுதி பணிகளை திறம்பட செயல்படும் வகையிலும் அவர்களின் வசதிக்காக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் இன்று அறிவித்துள்ளார்.
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உதவியாளரை நியமித்துக் கொள்ளலாம். அரசு வழங்கும் வாகனத்தை பராமரிக்கும் வகையில் வாகனத்திற்கு ஓட்டுநர் நியமித்து, வாகன எரிபொருள், வாகன பராமரிப்புக்காக ரூபாய் 75 ஆயிரம் வாகனபடியாக வழங்கப்படும். சட்டமன்ற உறுப்பினர்கள் உதவியாளரை நியமித்துக் கொள்ள மாதம் ரூபாய் 25 ஆயிரம் வழங்கப்படும்” என்ற சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்கப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்புக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேச அனுமதி வழங்கக் கோரி அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் அனுமதி வழங்காததையடுத்து, கர்நாடகவில் தமிழர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அரசின் நடவடிக்கை என்ன? என்று கேள்வி எழுப்பியவாறு அதிமுகவினர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
கவன ஈர்ப்பு தீர்மானத்தை எடுத்துக்கொள்ளவில்லை என சட்டப்பேரவையிலிருந்து அ.தி.மு.க வெளிநடப்பு.!#Chennai | #TNAssembly | #AssemblySession | #CMVijay | #TVKGovt | #JCDPrabhakar | #EPS | #UdhayanidhiStalin | #TVK | #DMK | #ADMK | #AssemblyUpdateswithPolimerNews | #PolimerNews pic.twitter.com/VBnOd37gZA
— Polimer News (@polimernews) August 19, 2026

