#BREAKING : அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா - 3 தொகுதிகள் காலி என அறிவிப்பு..!
அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த 3 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு.
அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்த 3 தொகுதிகள் காலி என சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது. மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்யபாமா (தாராபுரம்), ஜெயக்குமர் (பெருந்துறை) ஆகியோர் விலகிய நிலையில் அந்த தொகுதிகள் காலி என அறிவிக்கப்பட்டுள்ளது.
பதவியேற்ற 21 நாளில் சபாநாயகரிடம் ராஜினாமா கடிதத்தை அளித்த நிலையில் அவர் உடனடியாக ராஜினாமாவை ஏற்க தலைமைச் செயலகத்தில் வைத்து அமைச்சர் ஆதவ் முன்னிலையில் மூவரும் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தனர். இதற்கு அதிமுக தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தற்போது மதுராந்தகம், பெருந்துறை மற்றும் தாராபுரம் ஆகிய மூன்று தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே முதலமைச்சர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் ராஜினாமா செய்ததால் தற்போது தமிழ்நாட்டில் நான்கு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

