#BREAKING : ஆதவ் அர்ஜூனா கார் தடுத்து நிறுத்தம்! விஜய்க்கு மட்டும் அனுமதி - ஆளுநர் மாளிகையில் நடப்பது என்ன?

 
1

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பெற்ற  தவெக ஆட்சி அமைக்க பெரும்பான்மையான  118 இடங்கள் தேவை எனும் நிலையில் நேற்று திமுக கூட்டணியை முறித்து காங்கிரஸ் கட்சி அளித்த ஐந்து இடங்களுடன்  113 இடங்கள் பெற்று நேற்று ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க அனுமதி அளிக்குமாறு  கோரி இருந்த நிலையில் தற்போது வரை விஜய்க்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்படாத நிலையில் மீண்டும் இன்று ஆளுநர் விஸ்வநாத் அர்லேகரை சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய் . 

தவெக தலைவர் விஜய் 24 மணி நேரத்தில் இரண்டாவது முறையாக ஆளுநரை சந்திக்கிறார் என்பது அரசியலில் கவனிக்கப்பட தக்க விஷயமாக உள்ளது. தனிப் பெரும்பான்மை நிரூபிக்க இரண்டு வார காலம் அவகாசம் இருக்கும் நிலையில் ஆட்சி அமைக்க தவெக கட்சிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்பதை  ஆளுநரிடமா வலியுறுத்துவார் என்பது தெரிகிறது.

ஆளுநர் மாளிகைக்குள் விஜய் காருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது என்பதும் பின்தொடர்ந்த ஆதவ் அர்ஜூனாவின் கார் தடுத்து நிறுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

'தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் தகுதி தவெகவிற்கு உள்ளது என்றும் தமிழ்நாட்டில் 
முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் பெரும்பான்மையை நிரூபிக்கிறேன்' எனவும் தலைவர் விஜய் ஆளுநரிடம் கூறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது வரை ஆளுநரை சந்திக்க வந்த விஜய் மக்கள் பவனில்  காத்திருக்கிறார் என்பதும் தற்போது வரை ஆளுநர் அவரை சந்திக்கவில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன.