#BREAKING : விஜய்க்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு..!!

 
Q

ஜனநாயகன்’ திரைப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் நேற்று படம் இணைய தளங்களில் கசிந்தது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

சட்ட விரோதமாக படம் வெளியான நிலையில், திரைத்துறையினர் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ஜனநாயகன் படத்தின் சட்டவிரோத வெளியிட்டுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் யாராலோ வெளியிடப்பட்டிருப்பது அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.

“திரை அமைப்புகள் இதற்கு எதிராகக் குரல் எழுப்பி, அரசு இதைச் செய்தவர்களைக் கண்டுபிடித்து கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். இது போன்ற குற்றம் இனியும் தொடரக்கூடாது.” என தெரிவித்துள்ளார்.