#BREAKING : சென்னை ஆழ்வார்பேட்டை வாக்குச்சாவடியில் திமுக- பாஜகவினர் இடையே தள்ளுமுள்ளு..!

 
1

சென்னை ஆழ்வார்பேட்டை வாக்குச்சாவடியில் திமுக- பாஜகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.  பாஜக மயிலாப்பூர் வேட்பாளர் தமிழிசை முன்னிலையில் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை மயிலாப்பூர் தொகுதி ஆழ்வார்பேட்டை புனித பிரான்சிஸ் பள்ளி வாக்குச்சாவடியில் பாஜக வேட்பாளர் தமிழிசை - திமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடையாள அட்டை இல்லாமல் வாக்களிப்பதாக தமிழிசை குற்றம்சாட்டபட்ட நிலையில், திமுக முகவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் எழுந்ததால், போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். .இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் எழுந்ததால், கலைந்து செல்ல போலீசார் வலியுறுத்தல்