#BREAKING : பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து – 8 பேர் பரிதாப பலி!

 
1

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் வஸ்திரால் (Vastral) பகுதியில் உள்ள ஒரு சட்டவிரோத பட்டாசு ஆலையில் இன்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டு குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

அகமதாபாத்தின் வஸ்திரல் (Vastral) பகுதியில் உள்ள ராமோல்-கத்ராட் சாலையில் அமைந்துள்ள பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 9-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உரிமம் ரத்து செய்யப்பட்ட போதிலும், ஒரு விவசாயப் பண்ணையில் இந்த ஆலை சட்டவிரோதமாக இயக்கப்பட்டு வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.