#BREAKING : சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி..!!

 
Q

பொள்ளாச்சி அருகே நல்லாம்பள்ளி பிரிவு சாலையில், தடுப்புச் செடிகளுக்கு நீர் ஊற்றிக்கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த சோகமான சம்பவத்தில் காரில் பயணித்த 3 பெண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.