#BREAKING : அரசு பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட 30+ மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்..!!

 
1

திருவள்ளூர் அடுத்த கொட்டையூரில் அரசு நடுநிலைப் பள்ளியில் காலை உணவு விரிவாக்க திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட உணவில் பல்லி விழுந்ததால் அதிர்ச்சி. பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் பரபரப்பு

திருவள்ளூர் அருகே அரசு பள்ளியில் பல்லி விழுந்த காலை உணவு சாப்பிட்ட 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது

திருவள்ளூர் அடுத்த கொட்டையூரில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர்.

முதலமைச்சர் விரிவாக்கப்பட்ட காமராஜர் காலை உணவு திட்டம் இந்தப் பள்ளியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு காலை உணவு பரிமாறப்பட்டது. உணவை மாணவர்கள் காலை சாப்பிட்டு கொண்டு இருந்துள்ளனர். அதில் ஒரு மாணவரின் உணவில் பல்லி விழுந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்

அதனைத் தொடர்ந்து அனைத்து மாணவர்களும் சாப்பிடுவதை நிறுத்தியுள்ளனர். பின்னர் மூன்றுக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்  வாகனம் வரவைக்கப்பட்டு மாணவர்களை அனைவரையும் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திமுகவின் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான காலை உணவுத்திட்டம், தவெக ஆட்சியில் விரிவாக்கம் செய்யப்பட்டு காமராஜர் காலை உணவு திட்டம் என்று மாற்றப்பட்டது. கடந்த செவ்வாய்க்கிழமை இந்த திட்டத்தை திருவான்மியூரில் உள்ள அரசுப் பள்ளியில் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்து மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு நன்றாகவும் சுவை மற்றும் சுகாதாரமிக்கதாகவும் இருக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், இந்தத் திட்டம் தொடங்கிய இரண்டு நாட்களிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது.