#BREAKING : ஆண்டுக்கு 3 விலையில்லா சிலிண்டர், மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு..!!
சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆண்டுக்கு 3 விலையில்லா சிலிண்டர் வழங்கப்படும் - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு :
அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக ஆண்டுக்கு 3 சிலிண்டர் வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் அந்த சிலிண்டர்களுக்கான தொகை பயனர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் அடுத்த ஆண்டு ஜனவரி பொங்கல் பண்டிகை அன்று தொடக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
விவசாய நிலங்களில் பாதிக்கப்படாத வகையில், பரந்தூர் விமான நிலைப் பணிகளை கைவிட அரசு முடிவு செய்துள்ளதாக முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். புதிய விமான நிலையம் கட்ட புதிய நிலத்தை கண்டறியப்படும் பணி தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மகளிருக்கான வெற்றி பயணம் திட்டத்தின் கீழ் அனைத்து பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பயணம் விரிவுப்படுத்தப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல் இத்திட்டம் அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்

