#BREAKING : ஆதிதிராவிடர் – பழங்குடியினருக்கு 20 சதவீதம் கூடுதல் மானியம்..!
அண்ணல் அம்பேத்கர் வேளாண் உதவி திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பை சேர்ந்த சிறு, குறு விவசாயிகள், உயர்மதிப்பு வேளாண் திட்டங்களில் 20 சதவீதம் வரை கூடுதல் மானியம் வழங்கப்படும். ஆதிதிராவிடர் மற்றுமு் பழங்குடியின விவசாயிகளுக்கு மின்மோட்டார் சூரிய சக்தி பம்புசெட்டுகள் 300 ஆழ்துளை அல்லது குழாய் கிணறுகளுக்கு 100 சதவீதம் மானியம் வழங்கப்படும். இந்த திட்டத்திற்காக ரூ.56.72 கோடி நிதி ஒதுக்கீடு என அமைச்சர் வினோத் அறிவித்தார்.
விவசாய நிலங்களில் நிரந்தப் பசுமைக்கு வேளாண் காடுகள் திட்டத்திற்கு ரூ.17.70 கோடியும் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அமைச்சர் வினோத் அறிவித்தார்.
காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பயிர் இழப்புகளைத் தடுக்க காட்டுப்பன்றி சேதத்தடுப்பு திட்டம் ரூ. 7.35 கோடியில் செயல்படுத்தப்படும் என அமைச்சர் வினோத் அறிவிப்பு
ஒவ்வொரு ஆண்டும் 5 விவசாயிகளுக்கு சிறந்த உயிர்ம விவசாயிக்கான நம்மாழ்வார் விருது வழங்கப்படும். இதற்காக ரூ.11 லட்சம் ஒதுக்கீடு.
விவசாயிகளின் அனைத்து தேவைகளையும் ஒரே முகவரியில் பெறும் வகையில் 8 புதிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள் அமைக்கப்படும்.

