#BREAKING : +2 முடிவுகள் வெளியானது..இந்த மாவட்டம் தான் முதலிடம்..!!

 
12th exam

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது..

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. கடந்த மார்ச் 2 முதல் மார்ச் 26ஆம் தேதி நடந்த தேர்வில் மாநிலம் முழுவதும் 3,412 தேர்வு மையங்களில் 8 லட்சத்து 27 ஆயிரத்து 475 மாணவ, மாணவிகள் எழுதினர். இவர்களின் விடைத்தாள்கள் ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 20 வரை ஆசிரியர்களால் மதிப்பீடு செய்யப்பட்டன. இதற்காக 150க்கும் மேற்பட்ட மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அதன்பிறகு மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டு இன்று முடிவுகள் .வெளியானது.

அதில், 95.20 சதவீத மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர். இதில் 93.19 சதவீத மாணவர்களும், 97 சதவீத மாணவிகள் அடங்குவர்.

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களை காட்டிலும் மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெறுவர். அந்த வகையில் கடந்த ஆண்டில் 3.81 சதவீதம் அதிக மாணவிகள் தேர்ச்சி பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது.

மாணவர்கள் தேர்ச்சி – 93.19%

மாணவிகள் தேர்ச்சி – 97%

தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் இருந்து பிளஸ் 2 தேர்வை எழுதியுள்ளனர். இவர்கள் படிப்பதற்கும், தேர்வு எழுதுவதற்கும் பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதில் 238 பேர் தேர்ச்சி பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025-26ஆம் கல்வியாண்டில் பள்ளிகள் மூலம் அல்லாமல் தனியாக, அதாவது டுடோரியல் அல்லது நேரடியாக விண்ணப்பித்து பலர் தேர்வு எழுதியுள்ளனர். அவர்களில் 6,171 பேர் தேர்ச்சி பெற்றதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் 98.07% தேர்ச்சியுடன் முதலிடம் பிடித்துள்ளது. சிவகங்கை மாவட்டம் 98.05% உடன் இரண்டாம் இடத்தையும், கன்னியாகுமரி மாவட்டம் 97.63% உடன் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.