#BREAKING : மாயமான 2 போலீஸ் அதிகாரிகள் குண்டு காயங்களுடன் சடலமாக மீட்பு!

 
Q

கிஷ்துவார் மாவட்டத்தில் நேற்று மாயமான 2 போலீஸ் அதிகாரிகள் குண்டு காயங்களுடன் சடலமாக மீட்பு!

சிறப்பு அதிரடிப் படையில் பணியாற்றி வந்த பாபி சந்த் (57) மற்றும் ரஷ்பால் குமார் (45) ஆகியோர் உயிரிழப்பு. அவர்களின் ஆயுதங்கள் மாயமாகி உள்ளதால், பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

ஜம்மு காஷ்மீரின் கிஷ்ட்வார் மாவட்டத்தில் பணியில் இருந்த பாபி சந்த் (57) மற்றும் ராஷ்பால் குமார் (45) ஆகிய இரண்டு போலீஸ் சிறப்பு அதிகாரிகள் மாயமாகினர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்தது. இன்று இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இருவரது உடல்களிலும் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து பலத்த காயம் அடைந்துள்ளது; அவர்களின் துப்பாக்கிகள் மாயமாகி உள்ளன என போலீசார் தெரிவித்தனர். பயங்கரவாதிகள் இவர்களைக் கடத்திச் சென்று சுட்டுக் கொன்றிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.கிஷ்ட்வார் மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தியவர்களைப் பிடிக்க வனப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.