#BREAKING : 2 ராணுவ பயிற்சி விமானங்கள் வானில் மோதி விபத்து – 4 விமானிகள் பலி!

 
1

பிலிப்பைன்ஸ் விமானப்படை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, ஃபடங்காஸ் (Batangas) மாகாணத்தில் உள்ள ஃபர்னாண்டோ விமானப் படைத்தளத்தில் (Fernando Air Base) வெள்ளிக்கிழமை இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. வழக்கமான பயிற்சிக்காகப் பறந்த இரண்டு 'SF-260' ரக விமானங்கள் வானிலேயே ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மோதிய வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த இரண்டு விமானங்களும் விமானப் படைத்தள வளாகத்திற்குள்ளேயே கூளமாக நொறுங்கி விழுந்தன. இந்த விபத்தில் 4 விமானிகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதிர்ஷ்டவசமாக தரைப்பகுதியில் வேறு எந்தப் பகுதியிலும் உயிர்ச்சேதமோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கொடூர விபத்தைத் தொடர்ந்து, விபத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறியும் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை முடியும் வரை, பிலிப்பைன்ஸ் விமானப்படை தனது பயன்பாட்டில் உள்ள அனைத்து 'SF-260' ரகப் பயிற்சி விமானங்களின் இயக்கத்தையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது

அடிக்கடி நிகழும் விபத்துகள்: பிலிப்பைன்ஸ் ராணுவத்தில் 'SF-260' ரக விமானங்கள் விபத்துக்குள்ளாவது இது முதன்முறையல்ல.

  • கடந்த மே மாதம், பிலிப்பைன்ஸின் வடக்கு மலைப்பகுதியில் 'SF-260' ரகப் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் உயிரிழந்தனர்.

  • அதற்கு முன்னர், 2023-ஆம் ஆண்டிலும் 'SF-260 TP Marchetti' ரக விமானம் விபத்துக்குள்ளாகி 2 விமானிகள் பலியாயினர்.