#BREAKING : 70 வயதை கடந்த 13 திமுக மாவட்ட செயலாளர்கள் விடுவிப்பு..! பதவி இழக்கும் 13 பேர் யார்?

 
1

சென்னையில் இன்று ஆகஸ்ட் 22-ந் தேதி திமுகவின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

திமுக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கியத் தீர்மானத்தின்படி, மாவட்டச் செயலாளர்களுக்கான அதிகபட்ச வயது வரம்பு 70 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தொடர்ந்து, 70 வயதைக் கடந்த எ.வ.வேலு, செஞ்சி மஸ்தான், அனிதா ராதாகிருஷ்ணன், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், ஆர்.காந்தி, சுந்தர், எஸ்.ஆர்.சிவலிங்கம், முத்துசாமி, சாக்கோட்டை அன்பழகன், ரகுபதி, தளபதி, ராமகிருஷ்ணன், ஆவுடையப்பன் ஆகியோர் அந்த பதவியில் இருந்து நீக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுகவில் மாவட்ட செயலாளர் பதவியை இழக்கும் 13 பேர்:

  1. க. சுந்தர்- காஞ்சிபுரம் தெற்கு- வயது 72
  2. ஆர். காந்தி- இராணிப்பேட்டை- வயது 80
  3. எ. வ. வேலு- திருவண்ணாமலை தெற்கு- வயது 75
  4. செஞ்சி மஸ்தான்-விழுப்புரம் வடக்கு- வயது 71
  5. எஸ்.ஆர். சிவலிங்கம்- சேலம் கிழக்கு- வயது 75
  6. சு. முத்துசாமி- ஈரோடு தெற்கு- வயது 77
  7. சாக்கோட்டை க. அன்பழகன்- தஞ்சாவூர் வடக்குவயது 72
  8. ரகுபதி- புதுக்கோட்டை தெற்கு- வயது 76
  9. கோ. தளபதி- மதுரை மாநகர்- வயது 70
  10. நா. இராமகிருஷ்ணன்- தேனி தெற்கு- வயது 77
  11. கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன்- வயது 77
  12. அனிதா ஆர். ராதாகிருஷ்ணன்-தூத்துக்குடி தெற்கு- வயது 74
  13. இரா. ஆவுடையப்பன்- திருநெல்வேலி மேற்கு- வயது-81