#BREAKING : 1 சவரன் தங்கம் + பட்டுப்புடவை..!! தவெக அரசின் "அண்ணன் சீர்" திட்டடத்திற்கு ரூ.812 கோடி ஒதுக்கீடு..!

 
1

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைமையிலான அரசு, ஏழை மகளிரின் திருமணச் செலவுகளை குறைக்கும் வகையில் 'அண்ணன் சீர்' திட்டத்தை விரைவில் அமல்படுத்த உள்ளது. தேர்தல் அறிக்கையில் முக்கிய வாக்குறுதியாக இடம்பெற்ற இந்தத் திட்டம், திருமணம் செய்துகொள்ளும் ஏழைப் பெண்களுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் பட்டுப் புடவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய்க்கு உட்பட்ட வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மணப்பெண்களுக்கு இந்த உதவி வழங்கப்படும்.


இந்நிலையில் இது குறித்து பட்ஜெட்டில் பேசிய மரிய வில்சன்,திருமணமாகும் பெண்களுக்கு ஒரு சவரன் தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவை அண்ணனின்  சீர் வரிசை திட்டடத்திற்கு ரூ.812 கோடி ஒதுக்கீடு என அறிவிவித்துள்ளார்.

பெருந்தலைவர் காமராசர் காலை உணவு திட்டத்திற்கு ரூ. 710 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

மூத்த குடிமக்களுக்கான இல்லங்கள் முதற்கட்டமாக 12 மாவட்டங்களில் அமைக்கப்படும். இதற்காக ரூ.6.6 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

புதிதாக 500 அங்கன்வாடி மையங்களை கட்டப்படும். 3-ம் பாலினத்தவர்களுக்கு தொழிற்பயிற்சி மற்றும் தொழில் தொடங்க அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் மானியத்துடன் கடன் வழங்கப்படும். மூன்றாம் பாலினத்தவர்களுக்காக 5 மாவட்டங்களில் அறன் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்படும்.

சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறைக்கு ரூ. 9,818 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அமைச்சர் மரியவில்சன் அறிவித்தார்.

 

எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு?

  • உயர்கல்வித் துறை - ரூ.8,393 கோடி
  • சமூக நீதித்துறை - ரூ.3,937 கோடி
  • இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை - ரூ.1,051 கோடி ஒதுக்கீடு
  • சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை - ரூ.17,150 கோடி ஒதுக்கீடு
  • தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை - ரூ.2,022 கோடி ஒதுக்கீடு