பசி நீக்கும் செயல் கழிவறையை நிரப்பும் செயலாக தினமலருக்குப்படுகிறது - சு. வெங்கடேசன் எம்.பி. காட்டம்!!!

காலை உணவு திட்டத்தை விமர்சித்து செய்தி வெளியிட்ட தினமலருக்கு எம்.பி., சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இந்த சூழலில் பிரபல நாளிதழான தினமலரில் காலை உணவு திட்டம் மாணவர்களுக்கு டபுள் சாப்பாடு ஸ்கூல் கக்கூஸ் நிரம்பி வழிகிறது என்ற தலைப்பில் செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் மாணவர்கள் எல்லோருக்கும் காலை உணவு வழங்கப்படுகிறது.வீட்டில் சாப்பிட்டு வரும் மாணவர்கள் பள்ளிக்கு வந்ததும் அங்கும் சாப்பிடுகின்றனர். இதனால் அடுத்த ஒரு மணி நேரத்தில் இயற்கை உபாதைக்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
சூத்திரனுக்கு கல்வி தருவது
— Su Venkatesan MP (@SuVe4Madurai) August 31, 2023
புண்ணிலிருந்து வரும் சீழைக் குடிப்பதற்குச் சமம்...
என்று அன்று
கூறியவர்கள்
அதே வன்மத்தோடு இன்றும்.
பசி நீக்கும் செயல்
கழிவறையை நிரப்பும் செயலாக
தினமலருக்குப் படுகிறது.
சனாதனக் கருத்தியலின் பல்லைப்பிடுங்கும்
கூரியஆயுதம் கல்வி.
கற்போம்.
கற்பிப்போம் pic.twitter.com/eOqMyFmsAX
இந்நிலையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், சூத்திரனுக்கு கல்வி தருவது
புண்ணிலிருந்து வரும் சீழைக் குடிப்பதற்குச் சமம்...
என்று அன்று
கூறியவர்கள்
அதே வன்மத்தோடு இன்றும்.
பசி நீக்கும் செயல்
கழிவறையை நிரப்பும் செயலாக
தினமலருக்குப் படுகிறது.
சனாதனக் கருத்தியலின் பல்லைப்பிடுங்கும்
கூரியஆயுதம் கல்வி.
கற்போம்.
கற்பிப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.