#BREAKING : பிரபல தொழிலதிபர் பி.ஆர்.சுந்தர் பெங்களூருவில் கைது..!
சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் தொழிலதிபர் பி.ஆர்.சுந்தர். இவர் மீது, தனியார் செய்தி சேனலில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வரும் இளம்பெண் ஒருவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.
அந்த புகாரில், வேலைக்காக பி.ஆர்.சுந்தரிடம் கேட்டிருந்ததாகவும், அதன் ரீதியில் இருவருக்குள்ளும் பழக்கம் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் பி.ஆர்.சுந்தர் தனது வீட்டுக்கு வரவழைத்து அநாகரிகமாக நடந்து கொண்டதாகவும், இதுகுறித்து அவரது மனைவியிடம் கூறியபோது அவர் கண்டுகொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த ஜூன் 29ஆம் தேதி, நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்பதாக கூறி பி.ஆர்.சுந்தர் தனது அலுவலகத்திற்கு வரவழைத்ததாகவும், அங்கு ஓர் அறையில் 3 மணி நேரம் பூட்டி வைத்து பாலியல் தொல்லை அளித்து, கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அந்த செய்தி வாசிப்பாளர், காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த ஐஸ் ஹவுஸ் காவல் நிலைய போலீசார், பிரபல தொழிலதிபர் பி.ஆர் சுந்தர் மீது பாலியல் தொல்லை, பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில் பி.ஆர் சுந்தருக்கு ஆதரவாக செயல்பட்டதாக அவரது மனைவி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் பி.ஆர்.சுந்தர் தற்போது பெங்களூருவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் பி.ஆர்.சுந்தர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், உள்நோக்கம் கொண்ட புகார்களுக்கும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கும் பலியாகிவிட்டேன். காலம்தான், எல்லா உண்மையும் வெளிவரும். அதுவரை, வெறுப்பாளர்களும் சில ஊடகங்களும் மகிழட்டும் என்று பதிவிட்டுள்ளார்.
Have become a victim of motivated complaints and baseless allegations. Just a matter of time, all the truth will come out. Until then, haters and some media can enjoy. pic.twitter.com/wK3chqnktU
— P R Sundar (@PRSundar64) August 5, 2026
null

