தோட்டா பாய்ந்து சிறுவன் மரணம் : ஓபிஎஸ் இரங்கல்!!

 
ttn

மத்திய தொழிலகப்பாதுகாப்புப் படை வீரர் ஒருவரின் துப்பாக்கியிலிருந்து வெளியேறிய தோட்டா சிறுவன் புகழேந்தியின் தலையில் பாய்ந்து,சிறுவன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். 

ttn

புதுக்கோட்டை மாவட்டம் பசுமலைபட்டியில் துப்பாக்கி சுடும் தளத்தில் கடந்த 30ஆம் தேதி மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் தமிழக காவல்துறையினர் துப்பாக்கிச் சுடும் பயிற்சியை மேற்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக தோட்டா ஒன்று நார்த்தாமலை கொத்தமங்கலம் பட்டியை சேர்ந்த 11 வயது சிறுவன் புகழேந்தி தலையில் பாய்ந்தது . இதனால் சிறுவன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். 

இந்த சூழலில் புதுக்கோட்டை அருகே குண்டு பாய்ந்து சிறுவன் இறந்த வழக்கில் தமிழக காவல்துறையும் சேர்க்கப்பட்டுள்ளனர் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்ட தமிழக காவல் துறையினரும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர் மத்திய தொழில் பாதுகாப்பு படை காவல் துறையுடன் திருச்சி காவல்துறையும் வழக்கில் சேர்க்கப்பட்டு உள்ளனர் என எஸ்.பி. நிஷா தெரிவித்துள்ளார்.

ops

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே பசுமலையில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் கடந்த 30ஆம் தேதியன்று துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது,  மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர் ஒருவரின் துப்பாக்கியில் இருந்து வெளியேறிய தோட்டா இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த,  17 வயது சிறுவன் புகழேந்தியின் தலையில் பாய்ந்து ஆபத்தான நிலையில் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த , சிறுவன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.  உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்வுக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் " என்று குறிப்பிட்டுள்ளார்.