ஒரே ட்ராபிக்! கடுப்பான மதுபிரியர் சாலையின் நடுவே பைக்கை நிறுத்திவிட்டு சென்றதால் பரபரப்பு

 
ட்ராபிக்

புதுச்சேரி காமராஜ் சாலையில் தனது வாகனத்தை நிறுத்தி சென்ற மதுபிரியரால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

புதுச்சேரியில் தீபாவளி பண்டிகையையொட்டி நகரப்பகுதியில் உள்ள கடை வீதிகளில் கூட்ட நெரிசல் காணப்பட்டது. இதனிடையே புதுச்சேரி, காமராஜ் சாலையில் அதிகப்படியான வாகனங்கள் சாலையின் இரு புறமும் சென்றது. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது, 

இந்நிலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்ட மது பிரியர் ஒருவர், போதையில் சாலையின் நடுவே தனது இருசக்க வாகனத்தை நிறுத்திவிட்டு ஓரமாக சென்றுள்ளார். மேலும் 15 நிமிடத்திற்கு பின்னர் போக்குவரத்து சீரான நிலையில் மீண்டும் வந்து சாலையின் நடுவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது இருசக்கர வாகனத்தை எடுத்த சென்றுள்ளார், சாலையின் நடுவே இருசக்கர வாகனம் நிறுத்தப்பட்டதன் காரணமாக பிற வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகினர். மேலும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.